மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் ஆராய்ச்சி இருக்கை திட்டம் 2026-க்கான விண்ணப்பங்களை மத்திய கல்வித்துறை வரவேற்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 02 JUN 2026 2:00PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள முதன்மை அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தேசிய ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்களுக்கு உலகளாவிய சிறந்த பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறைகளிடமிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோரை ஈர்ப்பதற்காக தேசிய முன்முயற்சியான பிரதமரின் ஆராய்ச்சி இருக்கைத் திட்டம் 2026-க்கான விண்ணப்பங்களை மத்திய கல்வி அமைச்சகத்தின் கல்வித்துறை வரவேற்கிறது.

இத்திட்டம் உலகளாவிய இந்திய திறமையாளர்களை இந்தியாவில் விரைவாக விரிவடைந்து வரும் ஆராய்ச்சி, மேம்பாடு, புதுமைகண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் போன்ற 13 துறைகளுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செமிகண்டக்டர், சைபர் பாதுகாப்பு, சுகாதார நலன் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, வேளாண் மற்றும் உணவுத் தொழில்நுட்பம், அணுசக்தி ஆகியவை இத்துறைகளில் அடங்கும்.

இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆராய்ச்சிக்கான உதவியையும் ஆய்வகங்கள், ஆராய்ச்சி உள்கட்டமைப்பு அணுகலையும் இந்தியாவில் உள்ள முன்னணி அரசு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.

இதற்கான விண்ணப்பங்களை பிஎம்ஆர்சி இணையதளத்தில் 2026  ஜூன் 1 முதல்  விண்ணப்பிக்கலாம். இது குறித்த விரிவான தகவல்களை https://pmrc.education.gov.in என்ற இணையதளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267881&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2268107) வருகையாளர் எண்ணிக்கை : 94