பிரதமர் அலுவலகம்
காசநோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் குறித்த ஒரு கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
24 MAR 2026 1:36PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா எழுதிய ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
மக்கள் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டு, காசநோயை ஒழிப்பதை நோக்கிய நாட்டின் பயணத்தை இக்கட்டுரை விவரிக்கிறது. ஆராய்ச்சி- மேம்பாட்டில் இந்தியா தொடர்ச்சியான முதலீடுகளைச் செய்து, ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காசநோய் கண்டறியும் கருவிகளின் தொடர் வரிசையை உருவாக்கியுள்ளது என்பதை இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
"மத்திய அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா (@JPNadda), மக்கள் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டு, காசநோயை ஒழிப்பதை நோக்கிய நாட்டின் பயணம் குறித்து எழுதியுள்ளார்.
ஆராய்ச்சி - மேம்பாட்டில் இந்தியா தொடர்ச்சியான முதலீடுகளைச் செய்து, ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காசநோய் கண்டறியும் கருவிகளையும் அடுத்தடுத்து உருவாக்கியுள்ளது என்பதை திரு நட்டா அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்."
***
(Release ID: 2244361)
TV/PLM/KR
(रिलीज़ आईडी: 2267834)
आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam