பிரதமர் அலுவலகம்
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகையை பிரதமர் அறிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
23 MAR 2026 5:40PM by PIB Chennai
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கட்டடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தமது எண்ணங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹ 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு ₹ 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கட்டடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தால் மிகுந்த துயரம் அடைந்தேன். இந்த இக்கட்டான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது எண்ணங்கள் துணை நிற்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ₹ 2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ₹ 50,000 வழங்கப்படும்: பிரதமர்"
***
(Release ID: 2244060)
TV/PLM
(रिलीज़ आईडी: 2267818)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam