பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்த இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு அணுகுமுறை குறித்த கட்டுரை ஒன்றைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 MAR 2026 1:16PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப யுகத்தில், இந்தியாவின் புத்தாக்கப் பயணத்தை விளக்கும் கட்டுரை ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள இக்கட்டுரை, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எவ்வாறு உலகளாவிய கூட்டணிகளுடன் இணைந்துள்ளது என்பதையும், அதே சமயம் அது நாட்டின் முன்னுரிமைகளைச் சிதைக்காமல் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் விளக்குகிறது.

இது குறித்துப் பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப யுகத்தில், இந்தியாவின் புத்தாக்கப் பயணம் என்பது உலகளாவிய கூட்டணிகளுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுதியுள்ளார். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு அணுகுமுறையானது மனிதநேயத்தை மையமாகக் கொண்டது, அனைவரையும் உள்ளடக்கியது, மற்ற தொழில்நுட்பங்களுடன் இணைந்து செயல்படக்கூடியது  மற்றும் நாட்டின் திறனை  அடிப்படையாகக் கொண்டது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்."

***

(Release ID: 2243778)

TV/VK/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2267814) வருகையாளர் எண்ணிக்கை : 22