வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் 2026 ஜூன் 11-12 தேதிகளில் 13-வது பிரிக்ஸ் நகரமயமாக்கல் அமைப்புக் கூட்டத்தை இந்தியா நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUN 2026 5:42PM by PIB Chennai

புதுதில்லியில் 2026 ஜூன் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் 13-வது பிரிக்ஸ் நகரமயமாக்கல் அமைப்புக் கூட்டத்தை இந்தியா நடத்தவுள்ளதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் இன்று (ஜூன் 01, 2026) தெரிவித்தார்.

2026-ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் இந்தியத் தலைமையின் கீழ் நடைபெறும் முக்கிய அமைச்சர்கள் மட்டத்திலான நிகழ்வு இதுவாகும். 'புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

'மக்களுக்கான நகரங்கள்: அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான எதிர்கால நகரங்களுக்கான பிரிக்ஸ் ஒத்துழைப்பு' என்பது இம்மாநாட்டின் முக்கியக் கருப்பொருளாகும். நகரங்களின் திட்டமிடல், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டில் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 2013, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளைத் தொடர்ந்து இந்தியா இந்த மாநாட்டை நடத்துவது இது நான்காவது முறையாகும்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பின் அனைத்து 11 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய நகர்ப்புற மேம்பாடு, பருவநிலை மற்றும் பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு, சிறப்பான நகர்ப்புற நிர்வாகத்திற்கான டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் ஆகியவை குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்படும். மக்களை மையப்படுத்திய சிறந்த நகரங்களை கட்டமைப்பதில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இந்த மாநாடு மேலும் வலுப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267589&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2267698) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , Malayalam , Assamese , English , Urdu , हिन्दी , Bengali-TR , Telugu