தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவு அகாடமியைத் தொடங்கியது இந்திய மக்கள் தொடர்பு நிறுவனம்
प्रविष्टि तिथि:
29 MAY 2026 5:16PM by PIB Chennai
இந்திய மக்கள் தொடர்பு நிறுவனம் (ஐஐஎம்சி), ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்களை மேம்படுத்த ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான செயற்கை நுண்ணறிவு அகாடமியை (ஏஐஎம்இ) தொடங்கியுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு. சஞ்சல் குமார் இதனைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், 110-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற 10 வார கால 'செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி' நிறைவு விழா நடைபெற்றது. 'ஏஐஎம்இ' அகாடமி, ஊடகத்துறையில் ஏஐ பயன்பாடு குறித்த ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் கவனம் செலுத்தும்.
இந்தியா போன்ற பன்மொழி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், ஊடகங்களின் எதிர்காலத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்த அகாடமி செயல்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266663®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2266927)
आगंतुक पटल : 36