வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல், நியூயார்க்கில் உலகின் முன்னணி தொழில்துறையினருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAY 2026 3:33PM by PIB Chennai

மத்திய வர்த்தகம்தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்நேற்று (28 மே 2026) நியூயார்க் நகரில்உயர்மட்ட வணிகமுதலீட்டு சந்திப்புகளை நடத்தினார்.

இந்தப் பயணத்தின் போதுஅமைச்சர்கார்லைல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு ஹார்வி ஸ்வார்ட்ஸ்மார்கன் ஸ்டான்லியின் தலைமைச் செயல் அதிகாரி திரு டெட் பிக்வார்பர்க் பிங்கஸின் தலைவர் திரு சார்லஸ் கேஅம்னியல் பார்மசூட்டிகல்ஸின் தலைமைச் செயல் அதிகாரி திரு சிந்து படேல்மாஸ்டர்கார்டின் தலைமைச் செயல் அதிகாரி திரு மைக்கேல் மீபாக் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தியா-அமெரிக்கா வர்த்தக-முதலீட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துதல்இந்தியாவில் உலகளாவிய வணிகங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்விநியோகச் சங்கிலியின் திறனை மேம்படுத்துதல்நிதிச் சேவைகள்சுகாதாரம்டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைஉற்பத்திபுத்தாக்கம்செயற்கை நுண்ணறிவுவளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அந்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.

அமெரிக்க-இந்தியா உத்திசார் ஒத்துழைப்பு மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வணிகக் கலந்துரையாடலில்வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முக்கிய வணிக பிரதிநிதிகள் பங்கேற்றனர. இதில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் உரையாற்றினார். இந்தக் கலந்துரையாடல்இந்தியாவின் வலுவான வளர்ச்சிப் பாதைபொருளாதார சீர்திருத்தங்கள்வணிகம் செய்வதில் எளிமைஒத்துழைப்புக்கு சாத்தியமுள்ள துறைகள்முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவை குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266587&reg=3&lang=1  

***

SS/PLM/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2266767) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Telugu , Malayalam