பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன், பெட்ரோல், டீசலின் முழுமையான உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2026 8:14PM by PIB Chennai

சில்லறை விநியோகம், தொழில்துறை தேவைகள் என அனைத்து உள்நாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குத் தேவையான பெட்ரோல், டீசல் கையிருப்பு நாட்டில் போதுமான அளவுக்கும் அதிகமாக உள்ளது என்பதை மத்திய அரசு சந்தேகத்திற்கு இடமின்றி பதிவு செய்துள்ளது. இந்தியா உலகின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நாடாகும். செயல்பாட்டில் உள்ள 22 சுத்திகரிப்பு நிலையங்கள், ஆண்டுக்கு 258.1 மில்லியன் டன்கள் என்ற நிறுவப்பட்ட அளவைக் கொண்டுள்ளன. 2025-26-ம் நிதியாண்டில் உள்நாட்டு நுகர்வு 243.2 மில்லியன் டன்களாக இருந்தது. அதே ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 61.5 மில்லியன் டன்களாக இருந்தது. உலகளவில் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. எந்த விதமான விநியோகப் பிரச்சினையும் இல்லை.

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, அனைவருக்கும் பெட்ரோல், டீசல் தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், மாநில அரசுகள், தொழில் அமைப்புகளுடன் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பில் ஈடுபட்டு வருகிறார். அரசு நிலைமையைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறைச் செயலாளர், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தொழில் துறையினர் ஆகியோருடன் நிலைமையை ஆய்வு செய்தார். பெட்ரோலியப் பொருளுக்கு எந்தவொரு  பற்றாக்குறை இல்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266034&reg=3&lang=2

***

 TV/PLM/SE

 


(வெளியீட்டு அடையாள எண்: 2266103) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Kannada , Malayalam