பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
இந்தியாவின் பழங்குடியின பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான பரிசுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி உலகத்தலைவர்களுக்கு வழங்கியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 11:18AM by PIB Chennai
அண்மையில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் வளமான பழங்குடியின பாரம்பரியம், பாரம்பரிய கைவினைத் திறனைப் பிரதிபலிக்கும் வகையில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பரிசுகளை உலகத்தலைவர்களுக்கு வழங்கினார்.
மத்தியப்பிரதேசத்தின் பாரம்பரிய கோண்ட் ஓவியத்தை சுவீடனின் பட்டத்து இளவரசிக்கு வழங்கினார். கோண்ட் பழங்குடியின சமூகத்தால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற இக்கலை வடிவம் அதன் கடும் சிக்கலான புள்ளி, கோடுகள், சிறந்த இயற்கை வண்ணங்களுக்காக அறியப்படுகிறது. அத்துடன் இது பழங்குடியின கைவினைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறது.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு அசாம் மாநிலத்தின் முகாப்பட்டு சால்வையும், மணிப்பூரின் தங்குள் நாகா சமூகத்தினரின் ஷிருய் லில்லி சால்வையும் பரிசளிக்கப்பட்டது. அதனுடைய இயற்கையான தங்க நிற பளபளப்புக்காக அறியப்படும் புவிசார் குறியீடு பெற்ற முகாப்பட்டு பல நூற்றாண்டுகளாக பழங்குடியின நெசவாளர்களால் பாதுகாக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் ராணி, மணிப்பூரின் கருப்பு அரிசியை (சக் ஹாவ்) பெற்றுக் கொண்டார். இது பழங்குடியின மலைவாழ் சமூகத்தினரால் பாரம்பரியமாக பயிர் செய்யப்படுகிறது.
இந்தப் பரிசுகள் மூலம் இந்தியாவின் பழங்குடியின பாரம்பரியங்கள், கைவினை, கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவற்றை உலக அரங்கிற்கு பிரதமர் எடுத்துக் காட்டியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265275®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2265522)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam