பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAY 2026 6:16PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு தொடர்ச்சியான தகவல்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக, இன்று புதிதில்லி தேசிய ஊடக மையத்தில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள், மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் அதிகாரிகள் பங்கேற்று, எரிபொருள் இருப்பு, கடல்சார் செயல்பாடுகள், அப்பகுதியில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவிகள், மற்றும் முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்கினர்.
இந்தியாவின் உரப் பாதுகாப்பு வலுவாகவும், நிலையானதாகவும், நன்கு நிர்வகிக்கப்படுவதாகவும், அனைத்து முக்கிய உரங்களின் ஒட்டுமொத்த இருப்பும் தேவையை விடத் தொடர்ந்து அதிகமாக இருப்பதாகவும் உரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் உரங்களின் ஒட்டுமொத்த கையிருப்பு நிலை திருப்திகரமாக உள்ளது.
எரிவாயுவைப் பொறுத்தவரை, எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன. கடந்த 4 நாட்களில், நாடு முழுவதும் 6480-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு, 680-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன, 11 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதேபோல், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவன அதிகாரிகளின் திடீர் சோதனைகளும் தொடர்கின்றன. பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் திடீர் சோதனைகளைத் தீவிரப்படுத்தித் தொடர்கின்றன.
கடந்த 4 நாட்களில், சுமார் 1.66 கோடி எல்பிஜி சிலிண்டர்களுக்கான முன்பதிவுகள் பெறப்பட்டு, ஏறத்தாழ 1.72 கோடி எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
2026 மார்ச் முதல், சுமார் 7.99 லட்சம் பிஎன்ஜி இணைப்புகளுக்கு எரிவாயு வழங்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக 2.87 லட்சம் இணைப்புகளுக்கான உள்கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 10.86 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 8.27 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்காகப் பதிவு செய்துள்ளனர். 24.05.2026 வரை, 59,800 -க்கும் மேற்பட்ட பிஎன்ஜி நுகர்வோர் தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265044®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265190)
வருகையாளர் எண்ணிக்கை : 9