பிரதமர் அலுவலகம்
சிக்கிமின் செழுமையான பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியை எடுத்துரைக்கும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 MAY 2026 11:31AM by PIB Chennai
சிக்கிம் மாநிலம் தனது 51-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வேளையில், மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
சிக்கிம் நிலப்பரப்பின் பாதுகாவலனாகவும், அதன் நினைவாற்றல் மற்றும் உணர்வின் அடையாளமாகவும் விளங்கும் கஞ்சன்ஜங்கா மலையைப் பாராட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதை பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"சிக்கிம் மாநிலம் தனது 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், சிக்கிம் நிலப்பரப்பு, அதன் நினைவாற்றல் மற்றும் உணர்வின் பாதுகாவலனாக விளங்கும் கஞ்சன்ஜங்கா மலையைப் பாராட்டி மத்திய அமைச்சர் திரு. @JM_Scindia எழுதியுள்ளார்.
கஞ்சன்ஜங்காவின் ஐந்து புதையல்கள் இம்மாநிலத்தின் பயணத்தை தொடர்ந்து ஒளிரச் செய்து வருவதாகவும், 'வளர்ச்சியடைந்த சிக்கிம் 2047' நோக்கிய பாதையை அது அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் அவர் தனது கட்டுரையில் எடுத்துரைத்துள்ளார்."
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264704®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264748)
வருகையாளர் எண்ணிக்கை : 6