MIFF banner

19-வது சர்வதேச திரைப்பட விழா: ஊடகங்களுக்கான பதிவு தொடக்கம்!

தெற்காசியாவின் மிகப்பழைமையான மற்றும் புகழ்பெற்ற ஆவணப்படங்கள், குறும்படங்களுக்கான '19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா', வரும் ஜூன் 15 முதல் 21 வரை மும்பையில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் கலந்துகொள்வதற்கான ஊடகங்களுக்கான பதிவு தற்போது தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள திரைப்படக் கலைஞர்களை ஒன்றிணைக்கும் இவ்விழாவில், சமகால சினிமாவின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்கள் திரையிடப்படவுள்ளன.

திரைப்படக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்பதால், செய்தியாளர்களுக்கான அனுமதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த ஊடகப் பிரதிநிதிகள், வரும் ஜூன் 7-ஆம் தேதிக்குள் https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264266&reg=3&lang=1

***

TV/VK/RJ


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2264726   |   Visitor Counter: 49