பிரதமர் அலுவலகம்
சைப்ரஸ் குடியரசு அதிபரின் இந்திய அரசுமுறைப் பயணம் குறித்த கூட்டறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 9:31PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு. நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ், 2026 மே 20 முதல் 23, வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை சைப்ரஸ் ஏற்றுக் கொண்டுள்ள காலகட்டத்தில், அவரது இந்திய பயணம், தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜூன் 2025-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி, சைப்ரஸ் நாட்டிற்கு மேற்கொண்ட பயணத்தின் மூலம் உருவான வரலாற்றுச் சிறப்புமிக்க உத்வேகத்தின் தொடர்ச்சியாக, இப்பயணம் அமைந்துள்ளது. இந்த பயணம், இரு நாடுகளின் உத்திசார் ஒத்துழைப்பிற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. மேலும், இந்தியா-சைப்ரஸ் இடையேயான உறவுகள் தற்போதைய முடிவுகள் மற்றும் செயலாக்கம் சார்ந்த ஒரு புதிய கட்டத்திற்கு மாறுவதையும் இப்பயணம் குறிக்கிறது.
2025-ல் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையைச் செயல்படுத்துவதில் எட்டப்பட்டுள்ள கணிசமான முன்னேற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். அரசியல் ரீதியான பேச்சு வார்த்தைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வணிகத் தொடர்புகளின் பெருக்கம், பாதுகாப்புத் துறையில் மேம்பாடு மற்றும் புதுமை-தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பின் ஆகியவை இந்த முன்னேற்றங்களில் அடங்கும்.
மாறிவரும் புவிசார் அரசியல் சூழலையும், இந்தியா-சைப்ரஸ் கூட்டாண்மை மேலும் வலுவடைந்து வருவதையும் அங்கீகரிக்கும் வகையில், புதிய வாய்ப்புகளையும் பிரதிபலிக்கும் விதமாக, இருதரப்பு 'விரிவான ஒத்துழைப்பை' வலுப்படுத்துவது என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
மே 22, 2026 அன்று புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடோலிடிஸ்-க்கு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தார். ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று, தேசத்தந்தைக்கு மரியாதை செலுத்தினார். அவரது வருகையையொட்டி, குடியரசுத் தலைவர் விருந்தளித்தார்.
இந்த பயணத்தின் போது, சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடோலிடிஸ் பிரதமர் மோடியுடன் மே 22, 2026 அன்று புது தில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டதுடன், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சித் தெரிவித்தனர்
ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சி, பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, இந்தியா - சைப்ரஸ் இடையிலான நெருக்கமான, நம்பிக்கை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் குறித்தும், இருதரப்புக்கும் பொதுவான பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் அவர்கள் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த உச்சிமாநாடு 2026-ஐ வெற்றிகரமாக நடத்தியதற்காக, பிரதமர் மோடிக்கு, சைப்ரஸ் அதிபர் திரு கிறிஸ்டோடோலிடிஸ் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264380®=3&lang=1
***
TV/SV/RJ
(Release ID: 2264380)
(வெளியீட்டு அடையாள எண்: 2264679)
வருகையாளர் எண்ணிக்கை : 4