பிரதமர் அலுவலகம்
பஹ்ரைன் மன்னருடன் பிரதமர் உரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAR 2026 7:57PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, பஹ்ரைன் மன்னர் திரு ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா-வுடன் இன்று கலந்துரையாடினார். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று கூறினார்.
பிரதமர், பஹ்ரைன் மன்னர் திரு ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா-வுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு, அந்நாட்டு மன்னருக்கும், மக்களுக்கும், தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த பேச்சு வார்த்தையின் போது, இரு நாட்டுத் தலைவர்களும், மேற்கு ஆசியப் பிராந்தியத்தின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடினார். எரிசக்தி மற்றும் மக்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் திரு மோடி கண்டனம் தெரிவித்தார். மேலும், உலகளவில் உணவு, எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பில், அவற்றின் காரணமாக ஏற்படும் பாதகமான தாக்கத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதையும், கப்பல் வழித்தடங்களைத் திறந்த நிலையிலும், பாதுகாப்பானதாகவும் வைத்திருப்பதன் அவசியத்தையும் திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார். பஹ்ரைனில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக, அந்நாட்டு மன்னர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு, பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"பஹ்ரைன் மன்னர், திரு ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா-வுடன் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. அவருக்கும், அந்நாட்டு மக்களுக்கும், புனித ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தின் தற்போதைய நிலை குறித்து நாங்கள் விவாதித்தோம். அப்பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி மற்றும் மக்களின் உள்கட்டமைப்பு அமைப்புக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்ததுடன், அவை உலகளவில் உணவு, எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கத்தையும் சுட்டிக்காட்டினேன்.
தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதையும், கப்பல் வழித்தடங்களைத் திறந்த நிலையிலும், பாதுகாப்பானதாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தினோம்.
பஹ்ரைனில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக, அந்நாட்டு மன்னர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தேன்.”
***
(Release ID: 2243146)
SS/SV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263681)
வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam