பிரதமர் அலுவலகம்
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் அறங்காவலர்களுடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAR 2026 9:13PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் அறங்காவலர்களை இன்று சந்தித்து, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, கலாச்சார மேம்பாட்டுப் பயணத்தில் அதிகப்படியான மக்களை இணைப்பதற்கான வழிகள் குறித்து பிரதமர் மற்றும் அறங்காவலர்கள் ஆலோசித்தனர். டிஜிட்டல் முறையிலான அணுகுமுறைகள் மற்றும் மக்களுடனான நேரடித் தொடர்புகள் மூலம் விழிப்புணர்வை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் தளப்பதிவில், "இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் அறங்காவலர்களைச் சந்தித்து, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தேன்.
இந்த கலாச்சாரப் பயணத்தில் அதிக மக்களை ஈர்ப்பதற்கான வழிகள், டிஜிட்டல் மற்றும் அடிமட்ட அளவிலான முயற்சிகள் மூலம் மக்களுடனான தொடர்பை வலுப்படுத்துதல் மற்றும் நமது செழுமையான பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுக்கு ஆதரவளிப்பது குறித்தும் நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தினோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
---
(Release ID: 2242740)
SS/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263205)
வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam