பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தில் பாரபங்கி முதல் பஹரிச் வரை 6969.04 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 18 MAR 2026 4:10PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு உத்தரப்பிரதேசத்தில் நெடுஞ்சாலை எண் 927 பாரபங்கி முதல் பஹரிஷ் வரை 101 கிமீ தொலைவிற்கு 6969.04 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. 

கடுமையான புவிசார் இடர்பாடுகள் மற்றும் ஆபத்தான வளைவுகள் மற்றும் நெரிசல் மிகுந்த இப்பகுதியில் சாலைக்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு இது பெரிதும் உதவிடும்.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிப்பாதை அமைப்பதுடன் இணைச் சாலைகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அடங்கும். இதன் மூலம் மக்கள் வசிக்கும் முக்கியப் பகுதிகளை தவிர்த்து விரைவான போக்குவரத்திற்கு உறுதி செய்யும் வகையிலும் விரைவான போக்குவரத்தின் மூலம் பயண நேரத்தை வெகுவாக குறைப்பதற்கும் பாதுகாப்பான சாலைக் கட்டமைப்பு வசதிகள், எரிபொருள் சேமிப்புத் திறன் மற்றும் வாகனங்களை இயக்குவதற்கான செலவுகளைக் குறைக்கவும் உதவிடும் மேலும் இப்பகுதியில் பிராந்திய போக்குவரத்தை மேம்படுத்துவதுடன் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241794&reg=3&lang=2

 

-----

TV/SV/KPG/


(रिलीज़ आईडी: 2263186) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam