பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசியாவில் நிலவும் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு அமைச்சக அதிகாரிகள் விளக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAY 2026 5:12PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் நிலவும் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு அமைச்சக அதிகாரிகள் புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். கடந்த 3 நாட்களில், 1.40 கோடி சமையல் எரிவாயு சிலிண்டருக்கான (எல்பிஜி) முன்பதிவுகளில், ஏறத்தாழ 1.39 கோடி எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போதைய புவிசார் அரசியல் சூழல் பதற்றமாக இருந்தபோதிலும், உள்நாட்டு எல்பிஜி, உள்நாட்டு பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி (போக்குவரத்து) ஆகியவற்றுக்கு 100% விநியோகம் செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்களுக்காக 11,870-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. 3 ஏப்ரல் 2026 முதல் இந்த முகாம்களின் போது, 2.10 லட்சத்திற்கும் அதிகமான 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்களை விற்பனை செய்துள்ளன.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உற்பத்தியை அதிகரித்தல், நகர்ப்புறங்களில் முன்பதிவு செய்வதற்கான இடைவெளியை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் வரையிலும் அதிகரித்தல் மற்றும் விநியோகத்திற்காக, துறைகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே விநியோகம் மற்றும் தேவை ஆகிய இரு அம்சங்களையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 மற்றும் எல்பிஜி கட்டுப்பாட்டு ஆணை, 2000 ஆகிய சட்டங்களின் கீழ், விநியோகத்தைக் கண்காணிக்கவும், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கும், மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோக நிலையை கண்காணிப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும் மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகளுக்கும் பல கடிதங்கள் மற்றும் காணொளிக் கூட்டங்கள் வாயிலாக மத்திய அரசு இதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மார்ச் 2026 முதல், 7.03 லட்சம் பிஎன்ஜி இணைப்புகளுக்கு எரிவாயு நிரப்பப்பட்டுள்ளதுடன், கூடுதலாக, 2.72 லட்சம் இணைப்புகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், 7.49 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்காகப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவிற்கான எல்பிஜி எரிவாயுவை ஏற்றிச் சென்ற சிமி மற்றும் என்வி சன்ஷைன் ஆகிய இரண்டு கப்பல்கள், ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்து, காண்ட்லா மற்றும் புதிய மங்களூருக்கு சரக்கு விநியோகம் திட்டமிட்டபடி நடைபெறுகிறது.
ஓமானி கடல் பகுதியில், விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்த அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 72 மணி நேரத்தில் இந்தியக் கப்பல்கள் அல்லது இந்திய மாலுமிகளைக் கொண்ட வெளிநாட்டுக் கப்பல்கள் சம்பந்தப்பட்ட வேறு எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை.
மேற்கண்ட தகவலை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261051®=3&lang=1
(Release ID: 2261051)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261162)
வருகையாளர் எண்ணிக்கை : 10