தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில், வாக்காளர் பட்டியல் மூன்றாம் கட்ட சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள்

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 2:19PM by PIB Chennai

1)    இந்தியத் தேர்தல் ஆணையம், 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில், வாக்காளர் பட்டியல் 'சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை' மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

2)    தற்போது நடைபெற்று வரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின், வீடுகள் பட்டியலிடும் பணியுடன், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பொதுவான கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், வாக்காளர் பட்டியல் 'சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின், மூன்றாம் கட்டத்திற்கான கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

3)    இந்த மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேற்கூறிய மூன்று மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகளின் நிறைவு, அப்பகுதிகளில் உள்ள உயரமான மலைப்பகுதிகள்,  பனி சூழ்ந்த பிரதேசங்களில் நிலவும், வானிலைச் சூழலையும் கருத்தில் கொண்டு, இம்மூன்று மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

4)    மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின் போது, 3.94 லட்சத்திற்கும் அதிகமான 'வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்', 36.73 கோடி வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்வர். இவர்களுக்கு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 3.42 லட்சம் 'வாக்குச்சாவடி நிலை முகவர்கள்' உதவியாக இருப்பர். மாநிலம்/யூனியன் பிரதேசம் வாரியான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் குறித்த விவரங்கள் தனி இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

5)    வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி என்பது வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பங்கேற்புச் செயல்முறையாகும். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி, முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும், அரசியல் கட்சிகளின் முழுமையான பங்கேற்புடனும் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும், தங்களது வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்குமாறு, தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

6)    வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின் முதல் இரண்டு கட்டங்களில், 13 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 59 கோடி வாக்காளர்களை உள்ளடக்கிய பகுதிகளில், 6.3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 9.2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கான செயல்முறையின் பல்வேறு கட்டங்களில் ஈடுபட்டுப் பணியாற்றியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260955&reg=3&lang=1

***

SS/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261152) வருகையாளர் எண்ணிக்கை : 9