சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இந்தியாவில் உள்ள புலியினங்களை மையமாக கொண்ட நிகழ்வுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAY 2026 11:08AM by PIB Chennai
சர்வதேச புலிகள் கூட்டமைப்பின் நோக்கத்தை மேம்படுத்துவது மற்றும் புலியினங்களைப் பாதுகாப்பதில் இந்தியாவின் தலைமைத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், நாடு முழுவதும் அது தொடர்பான தொடர் நிகழ்வுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
புலி, ஆசிய சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, சிவிங்கைப்புலி ஆகிய இந்தியாவின் ஐந்து புலியினங்கள் குறித்தும் அவற்றைப் பாதுகாப்பது தொடர்பான சாதனைகள், தகவல்கள், மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட உள்ளது.
குஜராத் மாநிலம் கிர் பகுதியில் ஆசிய சிங்கம் பாதுகாப்பு நிகழ்ச்சியும் மத்தியப்பிரதேசம் போபாலில் சிவிங்கைப் புலி பாதுகாப்பு நிகழ்ச்சியும் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் சிறுத்தைப் பாதுகாப்பு மற்றும் உயிரிப் பன்முகத்தன்மை நிகழ்வுக்கான சர்வதேச தின நிகழ்ச்சியும் சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில் பனிச்சிறுத்தைப் பாதுகாப்பு நிகழ்ச்சியும் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் புலிப் பாதுகாப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260489®=3&lang=1
***
SS/IR/KPG/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2260703)
வருகையாளர் எண்ணிக்கை : 5