பிரதமர் அலுவலகம்
சோமநாதர் ஆலயத்தின் மீள்திறனையும் நாகரிக முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAY 2026 11:51AM by PIB Chennai
சோமநாதர் ஆலயத்தின் மீள்திறன் மற்றும் காலத்தால் அழியாத நாகரிக முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்தின் கட்டுரை ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
சோம்நாத் ஒரு கோயிலை விட மேலானது என்றும், அது இந்தியாவின் நிலைத்த மன உறுதிக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அழிவிலிருந்து புத்துயிர் பெற்ற அதன் பயணம், தேசத்தின் வெல்ல முடியாத பாரம்பரியத்தையும் அஞ்சா நெறியையும் பிரதிபலிக்கிறது என திரு மோடி எடுத்துரைத்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"சோம்நாத் ஒரு கோயிலை விட மேலானது; அது இந்தியாவின் நிலைத்த மன உறுதிக்கு ஓர் சான்றாக விளங்குகிறது. அழிவிலிருந்து புத்துயிர் பெற்ற அதன் பயணம், இந்தியாவின் வெல்ல முடியாத பாரம்பரியத்தையும் அஞ்சா நெஞ்சத்தையும் பிரதிபலிக்கிறது!
மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்தின் கட்டுரை, சோமநாதர் ஆலயத்தின் மீள்திறன் மற்றும் காலத்தால் அழியாத நாகரிக முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. படியுங்கள்!"
(Release ID: 2259693)
***
SS/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2259937)
வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam