MIFF banner

19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா: பிரதிநிதிகளுக்கான பதிவு தொடக்கம்

19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவிற்கான பிரதிநிதிகள் பதிவு தொடங்கியுள்ளது. இந்த திரைப்பட விழா, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பெட்டர் சாலையில் அமைந்துள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக  வளாகத்தில், ஜூன் 15 முதல் 21 வரை (2026-ம் ஆண்டு) நடைபெற உள்ளது. முழுநீளத் திரைப்படங்கள் அல்லாத படங்களுக்காகவே பிரத்யேகமாக நடத்தப்பட்டு வரும் இந்த திரைப்பட விழாவில், தெற்காசியாவின் மிகப் பழமையான, மிகவும் மதிப்பு வாய்ந்த விழாக்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களை இத்தத் திரைப்பட விழா ஒன்றிணைத்து வருகிறது.

உள்ளடக்க படைப்பாற்றல் துறையில், இந்தியத் திரைப்படத் துறை  உலகின் முன்னணி நாடாகத் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், மும்பை சர்வதேச திரைப்பட விழா, வளர்ந்துவரும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு முக்கியமான தளமாகவும், முன்னேற்றத்திற்கான படிக்கட்டாகவும் திகழ்கிறது.

 

மும்பை சர்வதேச திரைப்பட விழா 2026-க்கான பிரதிநிதிகள் பதிவு

இந்த சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு வருகை தரும் பிரதிநிதிகளுக்கான பதிவு, அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள், மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கான அதிகாரப்பூர்வ இணையதளம்  https://miff.in/en  மூலம் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவு நடைமுறையை நிறைவு செய்ய, பிரதிநிதிகள் பின்வரும் இணையப்பக்கத்தைப் பார்வையிடலாம்: https://my.miff.in/dashboard/

புதிய பயனர்கள் ஆன்லைன் கணக்கை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே இதில் கணக்கு வைத்திருப்பவர்கள் நேரடியாக இந்த இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பதாரர்கள் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, ரூ 500/- பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

மாணவர்களுக்கான பதிவு முற்றிலும் இலவசமாகும். 'மாணவர்' பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், விவரங்கள் மற்றும் அதற்கான துணை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, விழாவின் நிர்வாகக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும்.

 

பிரதிநிதிகள் பதிவு தொடர்பான ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், பங்கேற்பாளர்கள் registration@miff.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம்  தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளுக்கு, digitalteam@nfdcindia.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259302&reg=3&lang=1

 

 (Release ID: 2259302)

****

TV/SV/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2259364   |   Visitor Counter: 48