உள்துறை அமைச்சகம்
வெள்ள மேலாண்மை, வெப்ப அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த உயர்நிலைக் கூட்டம் மே 10-ம் தேதி உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
08 MAY 2026 4:52PM by PIB Chennai
வெள்ள மேலாண்மை, வெப்ப அலை தயார் நிலை ஆகியவை குறித்த உயர்நிலைக் கூட்டம் மே 10-ம் தேதி உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் நடைபெறுகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பேரிடர் மேலாண்மை தொடர்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
மக்களை மையமாகக் கொண்ட பேரிடர் மேலாண்மை, பேரிடர்களைத் தாங்கும் திறனை அதிகரித்தல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும். பேரிடர்களின் போது உயிர் சேதங்கள் ஏற்படாமல் தடுப்பது, சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் மிகக் குறைந்தபட்சமாக தடுப்பது ஆகியவை குறித்தும் இதில் விவாதிக்கப்படும்.
மேம்பட்ட தொழில்நுட்பப் பயன்பாடு, முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், ஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டால் அதை சமாளிப்பது, போதுமான நிவாரணப் பொருட்களை உறுதி செய்தல், மருத்துவ தயார்நிலை ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259081®=3&lang=1
****
TV/PLM/KPG/SH
(रिलीज़ आईडी: 2259180)
आगंतुक पटल : 59
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam