பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய விநியோகச் சங்கிலியில் தடைகள் இருந்தபோதிலும், நாட்டில் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனை விலைகளில் பெரிய அதிகரிப்பு எதுவும் இல்லை: மத்திய அரசு

प्रविष्टि तिथि: 09 APR 2026 5:40PM by PIB Chennai

மேற்கு ஆசிய சூழல் குறித்து, மத்திய அரசு இன்று புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் நடத்திய ஒரு விளக்கக் கூட்டத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள், வெளியுறவு மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகங்களின் அதிகாரிகள் பங்கேற்று, எரிபொருள் இருப்பு, கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்தியர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டனர். ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துத் துறையும் சமீபத்திய தகவல்களைப் பகிர்ந்து கொண்டது. அவற்றின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

மேற்கு ஆசிய நெருக்கடியின் காரணமாக, மருந்துப் பொருட்களுக்கான உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், நாட்டில் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனை விலைகளில் பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்படவில்லை.

மருந்துத் தொழிலுக்கு ஆதரவளிக்கவும், அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யவும், வருவாய்த்துறை 40 பெட்ரோலிய வேதிப் பொருட்களுக்கான சுங்க வரியை பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது. மருந்து உற்பத்திக்குத் தேவையான அத்தியாவசிய உள்ளீடுகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மருந்துப் பொருட்கள் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனங்கள் துறை ஆகியவற்றுடன் இணைந்து  செயல்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயுவைப் பொறுத்தவரை, 08.04.2026 அன்று, 51.5 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன.

மார்ச் 23, 2026 முதல், சுமார் 10 லட்சம் 5-கிலோ தடையில்லா வர்த்தக எல்பிஜி (எஃப்டிஎல்) சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதத்தில் அன்றாட சராசரி 77,000 ஆக இருந்த நிலையில், 08.04.2026 அன்று நாடு முழுவதும் 1.06 லட்சத்திற்கும் அதிகமான 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. மார்ச் 14, 2026 முதல் சுமார் 99,796  மெட்ரிக் டன் வர்த்தக எல்பிஜி (52. லட்சத்திற்கும் அதிகமான 19-கிலோ சிலிண்டர்களுக்குச் சமம்) சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. நேற்று, 6711 மெட்ரிக் டன் வர்த்தக எல்பிஜி (3.5 லட்சத்திற்கும் அதிகமான 19-கிலோ சிலிண்டர்களுக்குச் சமம்) சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன.

அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெய் இருப்புடன் உயர் திறனில் இயங்கி வருகின்றன, அதே நேரத்தில் போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பும் பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு நுகர்வை ஆதரிப்பதற்காக, சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

2026 ஏப்ரல் 5 அன்று ஹார்முஸ் நீரிணையைக் கடந்த இந்தியக் கொடி தாங்கிய 'கிரீன் ஆஷா' என்ற எல்பிஜி கப்பல், இன்று காலை ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தைப் பாதுகாப்பாக வந்தடைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250517&reg=3&lang=1

(Release ID: 2250517)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2250631) आगंतुक पटल : 67
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam