தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: புதுச்சேரியிலும், அசாமிலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வாக்குகள் பதிவு

இடுகை இடப்பட்ட நாள்: 09 APR 2026 8:58PM by PIB Chennai

புதுச்சேரி, அசாம், கேரள சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல்கள் மற்றும் கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநிலங்களின் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கி, பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றது.

இதுவரை இல்லாத அளவுக்கு புதுச்சேரியிலும், அசாமிலும் முறையே 89.83% மற்றும் 85.38% என அதிகபட்ச வாக்குகள் பதிவாகின. இதற்கு முன், புதுச்சேரி மற்றும் அசாமில் அதிகபட்ச வாக்குப்பதிவு முறையே 86.19% (2011 பொதுத் தேர்தல்) மற்றும் 84.67% (2016 பொதுத் தேர்தல்) ஆக இருந்தது.

மாநிலம்/ யூனியன் பிரதேசம்

வாக்கு சதவீதம் (%)

ஆண்கள்

பெண்கள்

3-வது பாலினம்

மொத்தம்

புதுச்சேரி

88.09

91.33

91.81

89.83

அசாம்

84.80

85.96

36.84

85.38

கேரளம்

75.01

80.86

57.04

78.03

 

தேர்தல் ஆணையர்கள் டாக்டர் எஸ்.எஸ். சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து, புதுச்சேரி, அசாம், கேரளாவில் முதல் முறையாக 100% வாக்குச்சாவடிகளிலும் உறுதிசெய்யப்பட்ட நேரலை இணைய ஒளிபரப்பு மூலம், வாக்குப்பதிவை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் கண்காணித்தார்.

அசாம் மற்றும் கேரள மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மொத்தம் உள்ள 296 சட்டமன்றத் தொகுதிகளில் 5.31 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இவற்றுடன், 3 மாநிலங்களில் (கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுரா) உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெற்றன.

சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின் (IEVP) ஒரு பகுதியாக, 22 நாடுகளைச் சேர்ந்த 38 பிரதிநிதிகள் வாக்குப்பதிவு செயல்முறைகளைப் பார்வையிட்டனர்.

2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவுப் பணியாளர்கள் நேற்று இரவே அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குச் சென்றடைந்தனர். போட்டியிடும் 1,899 வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட 1.8 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு முகவர்கள் முன்னிலையில், இன்று காலை 7 மணிக்கு முன்பே மாதிரி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, மொத்தம் உள்ள 63,084 வாக்குச்சாவடிகளிலும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு அமைதியாகத் தொடங்கியது.

மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதி வாரியாக தோராயமான வாக்காளர் பங்கேற்பு புள்ளிவிவரங்களை ECINet செயலியில் அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250605&reg=3&lang=2

(Release ID: 2250605)

 

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2250625) வருகையாளர் எண்ணிக்கை : 88
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Telugu