பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது உலகளாவிய உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம் ஜாம்நகரில் நிறுவப்பட்டுள்ளது, இந்தியாவிற்குப் பெருமிதம் அளிக்கிறது: பிரதமர்
பாரம்பரிய சுகாதாரத்தை உடனடித் தேவைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும், எதிர்காலத்திற்கும் தயாராக இருப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும்: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 19 DEC 2025 7:07PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது உலகளாவிய உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றினார்.

 

"ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம் நிறுவப்பட்டுள்ளது, இந்தியாவின் பாக்கியம் மற்றும் பெருமைக்குரிய விஷயம்" என்று பிரதமர் கூறினார். 2022-ம் ஆண்டில், நடைபெற்ற முதல் உச்சிமாநாட்டின் போது, உலகம் இந்தியாவிடம் இந்தப் பொறுப்பை மிகுந்த நம்பிக்கையுடன் ஒப்படைத்ததை அவர் நினைவு கூர்ந்தார். மையத்தின் நற்பெயர் மற்றும் செல்வாக்கு உலகளவில் விரிவடைந்து வருவது, அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம் என்றும், இந்த உச்சிமாநாட்டின் வெற்றி மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றும் திரு மோடி எடுத்துரைத்தார்.

 

பாரம்பரிய மருத்துவத் துறையில் ஆராய்ச்சியை வலுப்படுத்துதல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் உலகளவில் நம்பகமான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை பாரம்பரிய மருத்துவத்தை பெரிதும் மேம்படுத்தும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

 

"யோகா, பாரம்பரிய மருத்துவ முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.  இது முழு உலகிற்கும் ஆரோக்கியம், சமநிலை மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதையைக் காட்டியுள்ளது" என்று பிரதமர் பாராட்டினார். இந்தியாவின் முயற்சிகள் மற்றும் 175க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன், ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததை அவர் நினைவு கூர்ந்தார். சமீபத்திய ஆண்டுகளில் யோகா, உலகின் ஒவ்வொரு மூலையையும் அடைந்துள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார்.

 

21-ம் நூற்றாண்டில், வாழ்க்கையில் சமநிலையைப் பேணுவதற்கான சவால் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் கொண்ட ஒரு புதிய தொழில்நுட்ப சகாப்தத்தின் வருகை, மனித வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது என்றும், வரும் ஆண்டுகளில் வாழ்க்கை முறை இதுவரை இல்லாத வகையில் மாறும் என்றும் எடுத்துரைத்தார். உடல் உழைப்பு இல்லாமல் வளங்கள் மற்றும் வசதிகளின் வசதியுடன் இணைந்து, இத்தகைய திடீர் வாழ்க்கை முறை மாற்றங்கள் மனித உடலுக்கு எதிர்பாராத சவால்களை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பாரம்பரிய சுகாதாரம் தற்போதைய தேவைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், எதிர்கால பொறுப்புகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும், இது அனைவரின் பொதுவான கடமையாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், மத்திய அமைச்சர்கள் திரு ஜேபி நட்டா, திரு பிரதாப்ராவ் ஜாதவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206712&reg=3&lang=1

 

(Release ID: 2206712)

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2250232) வருகையாளர் எண்ணிக்கை : 26