பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலக உணவு இந்தியா 2025 நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 25 SEP 2025 8:41PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, புது தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற உலக உணவு இந்தியா 2025 நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, விவசாயிகள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் என அனைவரும் இந்நிகழ்ச்சியில் ஒன்றாகக் கூடியிருப்பதால், உலக உணவு இந்தியா புதிய தொடர்பு, புதிய இணைப்பு மற்றும் படைப்பாற்றலுக்கான ஒரு தளமாக உருவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு முதலீட்டாளரும் முதலீடு செய்வதற்கு முன் ஓர் இடத்தின் இயற்கை வலிமைகளை மதிப்பீடு செய்கிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று, உலகளாவிய முதலீட்டாளர்கள்குறிப்பாக உணவுத் துறையைச் சேர்ந்தவர்கள்மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவைப் பார்க்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். "பன்முகத்தன்மை, தேவை மற்றும் அளவு ஆகிய மூன்று ஆற்றல்களை இந்தியா கொண்டுள்ளது" என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்தியா அனைத்து வகையான தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்கிறது என்றும், இந்தப் பன்முகத்தன்மையே உலக அரங்கில் நாட்டிற்கு ஒரு தனித்துவமான இடத்தை அளிக்கிறது என்றும் கூறினார்.

"உணவு மற்றும் விவசாயத் துறைகளில் ஏராளமான புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுவதால், இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழலியலாக விளங்குகிறது," என்று கூறிய திரு மோடி, செயற்கை நுண்ணறிவு, மின்னணு வர்த்தகம், ட்ரோன்கள் மற்றும் செயலிகள் போன்ற தொழில்நுட்பங்கள் இந்தத் துறையில் ஒருங்கிணைக்கப்பட்டு, விநியோகச் சங்கிலிகள், சில்லறை விற்பனை மற்றும் பதப்படுத்தும் முறைகளை மாற்றியமைத்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்தியா பன்முகத்தன்மை, தேவை மற்றும் புதுமை ஆகியவற்றை வழங்குகிறது என்றும், இவையே முதலீட்டிற்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக இந்தியாவை மாற்றும் முக்கிய காரணிகள் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். தில்லி செங்கோட்டையில் தாம் வெளியிட்ட செய்தியை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் விரிவாக்கம் செய்வதற்கும் இதுவே சரியான நேரம் என்று அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய துணைப் பிரதமர் மேதகு திரு டிமிட்ரி பட்ருஷேவ், மத்திய அமைச்சர்கள் திரு சிராக் பாஸ்வான், திரு ரவ்னீத் சிங், திரு பிரதாப்ராவ் ஜாதவ் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171467&reg=3&lang=2    

----

TV/BR/KR


(रिलीज़ आईडी: 2249735) आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam