பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை சாம்பியன்களுடன் பிரதமரின் கலந்துரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2025 11:44AM by PIB Chennai

வீராங்கனை: ஐயா, அவர் (சகோதரி) பாடுவார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?

பிரதமர்: அது அப்படித்தான், உங்கள் அனைவரையும் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

ராங்கனை: ஐயா, உங்களுடன் பேசிய பிறகு நான் முழு திருப்தி அடைகிறேன்.

பிரதமர்: மகிழ்ச்சி .

பிரதமர்: நீங்கள் அனைவரும் கடினமாக உழைத்தவர்கள். உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

பிரதமர்: உங்கள் அனைவரிடமும் கையெழுத்து  இருக்கிறதா?

வீராங்கனை: ஆம் ஐயா, இருக்கிறது.

பிரதமர்: நான் இதில் கையெழுத்திட வேண்டும்.

வீராங்கனை: சரிங்க ஐயா.

பிரதமர்: இதைப் பாருங்கள், 'வந்தே மாதரம்' பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

வீராங்கனை: ஆமாம் ஐயா.

பிரதமர்: அதனால்தான் நான் 'வந்தே மாதரம்' என்று எழுதினேன்.

பிரதமர்: நீங்கள் மிகச் சிறப்பாகப் பாடுவீர்கள் என்று கேள்விப்பட்டோமே?

வீராங்கனை: ஆமாம் ஐயா. (பாடுகிறார்): "கங்காதரா சங்கரா கருணாகரா, மாமவ பவசாகர தாரகா, போ ஷம்போ, சிவ ஷம்போ ஸ்வயம்போ."

பிரதமர்: ஆஹா, அற்புதம்! நான் காசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது உங்களுக்குத் தெரியும், அதனால்தான் 'ஷம்பு' (சிவன்) பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடிவிட்டீர்கள்.

வீராங்கனை: ஆமாம் ஐயா.

வீராங்கனை: ஐயா, எங்கள் அணியில் உள்ள நாங்கள் அனைவரும் 'ஆல்-ரவுண்டர்'  வீராங்கனைகள்.

பிரதமர்: அப்படியா! அப்படியானால் இது அரசியலைப் போலத்தான். அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் ஆல்-ரவுண்டர்கள்தான். சில நேரங்களில் ஒருவர் அமைச்சராவார், சில நேரங்களில் எம்.எல்.ஏ  ஆவார், சில நேரங்களில் எம்.பி ஆவார்.

பிரதமர்: ஜெய் ஜெகந்நாத்!

வீராங்கனை: ஜெய் ஜெகந்நாத். நான் மோடி ஐயாவுடன் புகைப்படம் எடுக்கச் சென்றேன், அப்போது அவர் திடீரென "நீ பாடுவாயா?" என்று கேட்டார். "ஐயாவிற்கு இது எப்படித் தெரியும்?" என்று எனக்குப் புரியவில்லை, ஒரு நிமிடம் நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்.

பிரதமர்: காவ்யா, முதலில் இங்கே வாருங்கள்.

வீராங்கனை: நன்றி ஐயா.

வீராங்கனை: ஐயா, அந்தச் சகோதரி பாடுவார் என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?

பிரதமர்: அது அப்படித்தான், உங்கள் அனைவரையும் நான் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

வீராங்கனை: எனது தந்தைக்கும் ஒரு பெரிய கனவு இருந்தது. அவருக்கு உங்களை (பிரதமரை) மிகவும் பிடிக்கும். ஆனால் என் தந்தை இப்போது எங்களுடன் இல்லை. ஒருவேளை அவர் இதைப் பார்த்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

பிரதமர்: (உணவு பரிமாறும்போது) சாப்பிடுவதற்கு இவ்வளவுதான் இருக்கிறது என்று அர்த்தமல்ல, இன்னும் இருக்கிறது. ஆல்-ரவுண்டராக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் வீராங்கனைக்கு உணவு பரிமாறுவோம்.

வீராங்கனை: "உனக்குக் கண்கள் தெரியாது, உன்னால் என்ன செய்ய முடியும்? உன்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்று கிராமத்தில் உள்ளவர்கள் எங்களைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அதைக் கேட்கும் எங்கள் பெற்றோர்கள் கொஞ்சம் வருத்தப்படுவார்கள்.

பிரதமர்: இப்போது கிராமத்து மக்கள் அதற்கு நேர்மாறாகப் பேசத் தொடங்கியிருப்பார்கள் அல்லவா?

வீராங்கனை: ஆமாம் ஐயா, ஆமாம் ஐயா! உங்கள் கையால் முதல்முறையாக இனிப்புச் சாப்பிட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த உணர்வுகளை என்னால் விவரிக்க முடியவில்லை. எனக்கு ஒரு கனவு இருந்தது, இன்று என் கனவு நனவாகிவிட்டது.

பிரதமர்: தொடங்குங்கள் மகளே, தீபிகா. ஏன், இது உனக்கு பிடிக்கவில்லையா?

வீராங்கனை: எனக்குப் பிடித்திருக்கிறது.

பிரதமர்: நீங்கள் இனிப்புகளை மட்டும்தான் சாப்பிடுவீர்களா?

வீராங்கனை: ஐயா, உங்களுடன் பேசிய பிறகு நான் முழு மனநிறைவு அடைகிறேன்.

பிரதமர்: முழு மனநிறைவா, மகிழ்ச்சி.

பிரதமர்: கடினமாக உழைத்து முன்னேறுபவர்களின் உழைப்பு ஒருபோதும் வீண் போகாது. அது விளையாட்டு மைதானத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அப்படித்தான். நீங்கள் அனைவரும் அந்தத் தாரக மந்திரத்தோடு கடுமையாக உழைத்தவர்கள். உங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது பாருங்கள், உங்கள் தன்னம்பிக்கை முன்னைவிடப் பல மடங்கு அதிகரித்திருக்கும்.

வீராங்கனை: ஆமாம் ஐயா.

பிரதமர்: முன்பு, உங்கள் கிராமத்தில் உள்ள ஒரு ஆசிரியரிடம் பேசுவதற்குக் கூட நீங்கள் யோசித்திருக்கலாம், பேசலாமா வேண்டாமா என்று தயங்கியிருக்கலாம். ஆனால் இன்று, நீங்கள் நாட்டின் பிரதமருடனேயே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

வீராங்கனை: ஆமாம் ஐயா. நீங்கள் எங்களிடம் மிகவும் கனிவாகப் பேசுகிறீர்கள். நாங்கள் அனைவரும் மிகவும் இயல்பாக உணர்கிறோம்... உங்களிடம் இன்னும் பேச வேண்டும் போல இருக்கிறது.

பிரதமர்: நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினர், அதனால்தான் நான் உங்களிடம் இப்படிப் பேசுகிறேன்.

வீராங்கனை: பிரதமர் தலைமையில் எங்கள் விளையாட்டுத் துறை மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது. அவர் ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறந்த பணிகளைச் செய்து வருகிறார். இதனால் பல அணிகள் முன்னுக்கு வருகின்றன.

பிரதமர்: உங்களைச் சந்திக்கும்போது எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. "ஆஹா, நம் நாடு எவ்வளவு முன்னேறி வருகிறது, இந்தக் குழந்தைகளுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கிறது!" என்று வியக்கிறேன். இது நாம் தேர்தலில் போட்டியிடுவதைப் போன்றதுதான்.

வீராங்கனை: ஆமாம் ஐயா.

பிரதமர்: தேர்தலில் எதிரணியினர் வைப்புத்தொகையை இழக்கும்போது , "நீங்கள் என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள், அவர்கள் வைப்புத்தொகையை கூட விட்டுவைக்கவில்லையே" என்று மக்கள் கிண்டல் செய்வார்கள். அதுபோல, இந்த முறை நீங்கள் எதிரணியினரை 10 ஓவர்களிலேயே பெவிலியனுக்கு திருப்பி அனுப்பிவிட்டீர்கள் போலிருக்கிறது?

வீராங்கனை: ஐயா, 10 ஓவர் அல்ல, மூன்றே ஓவர்களில் அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டோம்!

பிரதமர்: (சிரித்துக்கொண்டே) ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறீர்கள்? சரி, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள், இது அனைவருக்கும் ஒரு உத்வேகமாக அமையும்.

வீராங்கனை: ஆமாம் ஐயா.

வீராங்கனை: மிக்க நன்றி ஐயா.

பிரதமர்: இது மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஒரு பெரிய உந்துசக்தியாக இருக்கும்.

---

(Release ID:2195723)

AD/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2249282) வருகையாளர் எண்ணிக்கை : 5