மத்திய அமைச்சரவை
நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் நகர்ப்புற சவால் நிதியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
14 FEB 2026 1:09PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மொத்த மத்திய ஒதுக்கீட்டுடன் நகர்ப்புற சவால் நிதியத்தைத் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்டச் செலவில் குறைந்தபட்சம் 50% சந்தையிலிருந்து திரட்டப்படும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புறத் துறையில் நான்கு லட்சம் கோடி ரூபாய் மொத்த முதலீட்டிற்கு இது வழிவகுக்கும். இது இந்தியாவின் நகர்ப்புற மேம்பாட்டு அணுகுமுறையில் மானிய அடிப்படையிலான நிதியிலிருந்து சந்தை சார்ந்த, சீர்திருத்தம் சார்ந்த, விளைவு சார்ந்த உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கு ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் ஏற்படுத்தும்.
உயர்தர நகர்ப்புற உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக சந்தை நிதி, தனியார் பங்கேற்பு, மக்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நகர்ப்புற சவால் நிதியம் பயன்படுத்தும். நாட்டின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சியின் முக்கிய ஊக்க சக்தியாக நகரங்களை நிலைநிறுத்தி, பருவநிலைக்கு ஏற்ற நகரங்களை உருவாக்குவதை இந்த நிதியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிதியம் 2025–26-ம் நிதியாண்டிலிருந்து 2030–31-ம் நிதியாண்டு வரை செயல்படும்.
10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அனைத்து நகரங்களும் (2025 மதிப்பீடுகள்);
நகர்ப்புற சவால் நிதியமானது பெரிய அளவிலான தனியார் முதலீட்டை ஊக்குவித்து, நகர்ப்புற நிர்வாகத்தை வலுப்படுத்தி, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் நகரங்களை உருவாக்குவதைத் துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227986®=3&lang=1
***
(Release ID: 2227986)
TV/PLM/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2242573)
வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam