பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டோக்கியோவில் நடந்த 25வது கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக்ஸ் 2025-இல் சிறப்பான செயல்பாட்டிற்காக இந்தியக் காது கேளாதோர் ஒலிம்பிக் வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2025 5:10PM by PIB Chennai

டோக்கியோவில் நடைபெற்ற 25வது கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக்ஸ் 2025-இல்  சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்தியக் காது கேளாதோர் ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

9 தங்கப் பதக்கங்கள் உட்பட, மொத்தம் 20 பதக்கங்கள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க, இதுவரை இல்லாத சிறந்த பதக்கப் பட்டியலுடன், நமது விளையாட்டு வீரர்கள் உறுதியும் அர்ப்பணிப்பும் சிறப்பான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

பிரதமர் ஒவ்வொரு விளையாட்டு வீரர், பயிற்சியாளர் மற்றும் ஆதரவு ஊழியர்களின் அயராத முயற்சிக்கும் அர்ப்பணிப்புக்கும் பாராட்டுத் தெரிவித்தார். அவர்களின் சாதனைகள் உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும், ஒட்டுமொத்த தேசமே அவர்களைப் பற்றிப் பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து பிரதமர் திரு. மோடி, சமூக ஊடகப் பதிவில் “டோக்கியோவில் நடைபெற்ற 25வது கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக்ஸ் 2025-இல் அசாதாரணமான செயல்திறனை வெளிப்படுத்திய நமது காது கேளாதோர் ஒலிம்பிக் வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

9 தங்கப் பதக்கங்கள் உட்பட 20 பதக்கங்கள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க, இதுவரை இல்லாத சிறந்த பதக்கப் பட்டியலுடன், நமது விளையாட்டு வீரர்கள் உறுதியும் அர்ப்பணிப்பும் சிறப்பான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். ஒவ்வொரு விளையாட்டு வீரர், பயிற்சியாளர் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கும் வாழ்த்துகள். ஒட்டுமொத்த தேசமே உங்களை நினைத்து பெருமை கொள்கிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

***

Release ID :2195396

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2242121) வருகையாளர் எண்ணிக்கை : 28