பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராய்ப்பூரில் நடைபெற்ற காவல்துறை டிஜிபி/ஐஜி மாநாட்டிற்கு பிரதமர் தலைமை வகித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 NOV 2025 8:24PM by PIB Chennai

ராய்ப்பூரில் நடைபெற்ற காவல்துறை இயக்குநர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புமுறையின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்புத் துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமைகளைப் பகிர்ந்து கொள்ள இந்த மன்றம் ஒரு முக்கிய தளமாக செயல்படுகிறது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், திரு மோடி குறிப்பிட்டதாவது:

"ராய்ப்பூரில் நடைபெற்ற காவல்துறை தலைமை இயக்குநர்கள்/காவல்துறை தலைவர்கள் மாநாட்டின் முதல் நாளன்று இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இந்தத் துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமைகளைப் பகிர்ந்து கொள்ள இது ஒரு சிறந்த மன்றமாகும்."

----

(Release ID: 2196420)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2242108) வருகையாளர் எண்ணிக்கை : 19