பிரதமர் அலுவலகம்
சர் மார்க் டல்லியின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
25 JAN 2026 7:11PM by PIB Chennai
பத்திரிகைத் துறையின் முக்கிய ஆளுமையாக விளங்கிய சர் மார்க் டல்லியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் சர் மார்க் டல்லியின் ஆழமான தொடர்பு அவரது படைப்புகளில் தெளிவாகப் பிரதிபலித்தது என்று பிரதமர் கூறியுள்ளார். சர் மார்க்கின் இதழியல் திறன் மற்றும் நுண்ணறிவுகள் பொது விவாதத்தில் நீடித்த முத்திரையை பதித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். சர் மார்க் டல்லியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்குப் பிரதமர் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பத்திரிகைத் துறையின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான சர் மார்க் டல்லியின் மறைவால் வருத்தமடைந்தேன். இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் அவருக்கு இருந்த தொடர்பு அவரது படைப்புகளில் பிரதிபலித்தது. அவரது இதழியல் திறன் மற்றும் நுண்ணறிவுகள் பொது உரையாடலில் நீடித்த முத்திரையை பதித்துள்ளன. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கல்.”
***
(Release ID: 2218545)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2242053)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam