பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2025 10:08PM by PIB Chennai

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இது ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமரின் 12-வது பங்கேற்பாகும். உச்சிமாநாட்டின் தொடக்க நாளின் இரு அமர்வுகளிலும் பிரதமர் உரையாற்றினார். தென்னாப்பிரிக்க அதிபர் திரு ராமபோசாவின் அன்பான விருந்தோம்பலுக்காகவும், உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

"உள்ளடக்கிய, நிலையான பொருளாதார வளர்ச்சி" என்ற தலைப்பில் தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர், சுற்றுலா, உணவுப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம்,  பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய துறைகளில் தென்னாப்பிரிக்க தலைமையின் கீழ் ஜி20 ஆற்றிய பணிகளைப் பாராட்டினார். இந்தச் செயல்பாட்டில், புதுதில்லி உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட சில வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியின் புதிய அம்சங்களைப் பார்க்க வேண்டிய நேரம் இது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அனைவருக்கும் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நல்வாழ்வுக்கான இந்தியாவின் அணுகுமுறையை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜி20 கருத்தில் கொள்ள ஆறு யோசனைகளை முன்மொழிந்தார்.

அவை:

 

* ஜி20 உலகளாவிய பாரம்பரிய அறிவு களஞ்சியத்தை உருவாக்குதல்

* ஜி20 ஆப்பிரிக்கா திறன் கட்டமைப்பை உருவாக்குதல்

* ஜி20 உலகளாவிய சுகாதார குழுவை உருவாக்குதல்

* ஜி20 திறந்த செயற்கைக்கோள் தரவு ஒத்துழைப்பை ஏற்படுத்துதல்

* ஜி20 முக்கிய கனிம முன்முயற்சியை உருவாக்குதல்

* போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத் ஒடுக்குவதில் ஜி20 நாடுகள் இணைந்து ஒரு முன்முயற்சியை உருவாக்குதல்

புது தில்லி ஜி20 உச்சிமாநாட்டின்போது ஆப்பிரிக்க யூனியனை ஜி20-ன் நிரந்தர உறுப்பினராகச் சேர்த்தது ஒரு பெரிய முன்னேற்றம் என்றும், இந்த உள்ளடக்கிய மனப்பான்மையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

----

(Release ID: 2193046)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2241211) வருகையாளர் எண்ணிக்கை : 6