பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

தில்லி–மும்பை அதிவேகச் சாலையிலிருந்து ஜேவர் சர்வதேச விமான நிலையத்துக்கு பசுமைவழி இணைப்புச் சாலை அமைப்பதற்கான திருத்தப்பட்ட செலவுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 10 MAR 2026 4:29PM by PIB Chennai

ரூ.3630.77 கோடி திருத்தப்பட்ட மொத்த மூலதனச் செலவில் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் தில்லி-மும்பை விரைவுச் சாலையின் தில்லி- ஃபரிதாபாத்- பல்லப்கர்- சோஹ்னா ஸ்பர் வரையில்ஜேவர் சர்வதேச விமான நிலையத்திற்கான பசுமைவழி இனிப்பு சாலையை அமைப்பதற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது.

31.42 கி.மீ நீளமுள்ள இந்தத் திட்டப் பாதை தெற்கு டெல்லி, ஃபரிதாபாத் மற்றும் குருகிராமிலிருந்து ஜேவர் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி மற்றும் அதிவேக இணைப்பை வழங்கும். இதன் மூலம் தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) முழுவதும் பொருளாதார வளர்ச்சி மற்றும் தளவாட செயல்திறனை ஊக்குவிக்கும்.

இந்த வழித்தடம் கிழக்கு புற விரைவுச்சாலை, யமுனை விரைவுச்சாலை மற்றும் பிரத்யேக சரக்கு வழித்தடம் ஆகியவற்றைக் கடந்து செல்வதுடன், பன்முனை போக்குவரத்து ஒருங்கிணைப்பை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் சுமார் 11 கி.மீ நீளம் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையாக உருவாக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம் ஃபரிதாபாத் பெருந்திட்டம், 2031-இன் கீழ் நகர்ப்புற மேம்பாடு மற்றும் எதிர்கால உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியைக் கடந்து செல்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237576&reg=3&lang=2  

***

TV/BR/KR


(रिलीज़ आईडी: 2241114) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam