பிரதமர் அலுவலகம்
காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்குப் பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2025 4:30PM by PIB Chennai
உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காசநோய் அறிக்கை 2025-ன் படி, காசநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“காசநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காசநோய் அறிக்கை 2025 இதை எடுத்துக்காட்டுகிறது. 2015-ம் ஆண்டு முதல் இந்தியாவில் காசநோய் பாதிப்பு பாராட்டத்தக்க அளவில் குறைந்துள்ளதாகவும், உலகளாவிய காசநோய் சரிவு விகிதத்தை விட இந்தியாவில் அதன் சரிவு விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் என்பதையும் அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. உலகில் எங்கும் காணப்படாத வேகமான காசநோய் வீழ்ச்சி இதுவாகும். சிகிச்சைகளின் விரிவாக்கம், சிகிச்சையின் வெற்றி ஆகியவை மகிழ்ச்சியளிக்கின்றன. இந்த வெற்றியை அடைய உழைத்த அனைவரையும் நான் பாராட்டுகிறேன். ஆரோக்கியமான இந்தியாவை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்!
----
(Release ID: 2190249)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2240926)
வருகையாளர் எண்ணிக்கை : 42
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam