பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

50-வது பிரகதி ஆய்வுக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை வகித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 DEC 2025 8:11PM by PIB Chennai

ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல்நோக்கு மாதிரி தளமான பிரகதியின் 50-வது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தின் போது, சாலை, ரயில்வே, மின்சாரம், நீர்வளம், நிலக்கரி உள்ளிட்ட துறைகளில் ஐந்து முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் ஆய்வு செய்தார். இந்தத் திட்டங்கள் 5 மாநிலங்களை உள்ளடக்கியது. இவற்றின் மொத்த செலவு ₹40,000 கோடிக்கும் அதிகமாகும்.

இந்த கூட்டத்தில் பேசிய, பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா நிர்வாகக் கலாச்சாரத்தில் கண்ட ஆழமான மாற்றத்தின் அடையாளமாக இந்த மைல்கல் சாதனை அமைந்துள்ளது என்றார். சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படும்போதுஅரசு செயல்பாட்டின் வேகம் இயல்பாகவே அதிகரிக்கிறது எனவும் அதன் தாக்கம் குடிமக்களின் வாழ்க்கையில் நேரடியாகத் தெரியும் என்றும் பிரதமர் கூறினார்.

பிரகதி அமைப்பு 85 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை விரைவுபடுத்த உதவியுள்ளது என்றும், பெரிய திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கு உதவியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

2014-ம் ஆண்டு முதல், பிரகதி திட்டத்தின் கீழ் 377 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில், காணப்பட்ட 3,162 சிக்கல்களில் 2,958 - அதாவது சுமார் 94 சதவீதம் தீர்க்கப்பட்டுள்ளன. இதனால் தாமதங்கள், செலவு ஆகியவை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

***

(Release ID: 2210304)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2240810) வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam