பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பார்படாஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது தொடர் வெற்றி பெற்ற பிரதமர் மியா அமோர் மோட்லிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 FEB 2026 12:17PM by PIB Chennai

பார்படாஸில் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது தேர்தல் வெற்றியைப் பெற்ற அந்நாட்டுப் பிரதமர்  மியா அமோர் மோட்லிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பார்படாஸுடனான நீண்டகால நட்பை இந்தியா மிகவும் மதிக்கிறது என்றும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும் திரு நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளார். 2024-ம் ஆண்டு இந்தியா-கேரிகாம் உச்சிமாநாட்டின் போது அவருடனான சந்திப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இருநாடுகளின் மக்களின் நலனுக்காக இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் நெருக்கமாக பணியாற்ற காத்திருப்பதாகத் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்றாவது தேர்தல் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

பார்படாஸுடனான நீண்டகால நட்பை இந்தியா மிகவும் மதிக்கிறது. இது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துகிறது.

2024-ல் இந்தியா-கேரிகோம் உச்சிமாநாட்டின் போது எங்கள் சந்திப்பை நான் அன்புடன் நினைவு கூர்கிறேன். நமது மக்களின் நலனுக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அவருடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்."

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227385&reg=3&lang=1  

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2239749) வருகையாளர் எண்ணிக்கை : 32