தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைத்து பத்திரிகை பதிவு சேவைகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன – மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAR 2026 5:59PM by PIB Chennai

பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுச்சட்டம் 2023-ன் படி பருவ இதழ்கள் பதிவுக்கான அனைத்து விண்ணப்பங்களும் பத்திரிகை சேவை இணையதளம் மூலம் மின்னணு வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. அதன்படி பதிவு செய்யப்பட்ட செய்தித்தாள்களின் அனைத்து ஆவணங்களும் (1.5 லட்சத்திற்கும் அதிகமான) தற்போது மின்னணு மயமாக்கப்பட்டுள்ளது. புதிய பருவ இதழ்கள் பதிவு, தற்போதைய பருவ இதழ்களின் மறுபதிவு, உரிமையாளர்கள் மாற்றம், ஆண்டறிக்கை தாக்கல் செய்தல், அபராத தொகையை ஆன்லைன் மூலம் செலுத்துதல், பருவ இதழ் பிரதிகளின் எண்ணிக்கை சரிபார்த்தல் போன்றவை தற்போது மின்னணு சேவைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

2024 மார்ச் 1 முதல் 11081 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேவையான வகைகளில் சான்றளிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை சேவை இணையதளம் மூலம் 2026 பிப்ரவரி 27 வரை ரூ. 5,63,83,000 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. 88,315 வெளியீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை மத்திய தகவல் ஒலி பரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்டுள்ள செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் குறித்த பட்டியலை https://prgi.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238411&reg=3&lang=1

****

TV/IR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2238491) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Odia , Telugu , Malayalam