தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பள்ளி, கல்லூரிகளில் ஏவிஜிசி உள்ளடக்க படைப்பாளர் ஆய்வகங்கள் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2026 3:20PM by PIB Chennai

மத்திய தகவல்  மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் மார்ச் 9-ந் தேதி “சப்கா சாத் , சப்கா விகாஸ் – மக்கள் விருப்பங்களை நிறைவேற்றுதல்: கல்வி, திறன்கள் மற்றும் பல்கலைக்கழக நகரங்கள்” என்ற பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கின்  ஒரு பகுதியாக “பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏவிஜிசி உள்ளடக்க படைப்பாளர் ஆய்வகங்கள்’’ பற்றிய அமர்வை நடத்தியது.

இந்தச் சந்திப்பில், மத்திய  பட்ஜெட் 2026–27-ல் அறிவிக்கப்பட்ட 15,000 நடுத்தரப் பள்ளிகள் மற்றும் 500 உயர் கல்வி நிறுவனங்களில் ஏவிஜிசி  உள்ளடக்க படைப்பாளர் ஆய்வகங்கள் நிறுவும் திட்டத்தின் நடைமுறைத் திட்டத்தை விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி, இந்தியா அனிமேஷன், விசுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறையை ஊக்குவித்து, கல்வி நிறுவனங்கள் தொழில்முறை அனுபவம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கற்றலை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் , இந்திய படைப்பாளர் தொழில்நுட்ப  நிறுவனத்தில் உலகத் தரமான உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் உள்ளதாக கூறினார். இந்த நிறுவனம் படைப்பாற்றல் , ஊடகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இளைஞர்களுக்கு உயர்தரக் கல்வி மற்றும் பயிற்சி வழங்கும். தூரதர்ஷன் “படைப்பாளர் மையம் ” திட்டம் மூலம் உள்ளடக்க உருவாக்கிகள் தங்கள் படைப்புகளை உலகளாவிய அளவில் வெளிப்படுத்தி வருமானம் ஈட்ட முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், தொழில் நெறியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு பாடத்திட்ட மேம்பாடு,  தொழில் இணைப்பு மற்றும் திறன் பாதைகள் குறித்து விவாதித்தனர். இதில், உள்ளடக்க படைப்பாளர் ஆய்வகங்களின் மாணவர்கள், அனிமேஷன், கேமிங், VFX மற்றும் டிஜிட்டல் கதை சொல்லல் போன்ற தொழில்கள் வழியாக திறன்களை வளர்க்கும் வாய்ப்பை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சி 16,600க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை கொண்டிருந்தது. அமைச்சர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து, உள்ளடக்க படைப்பாளர் ஆய்வகங்கள் திட்டத்தை நாட்டின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக இரணாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் விரிவுபடுத்தும் திட்டங்களை முன்மொழிந்தனர்.

இந்த முயற்சி, இளம் இந்தியர்கள் படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் திறன்களை கற்று, இந்தியாவை உலக ஏவிஜிசி துறையில் முன்னணி நாடாக மாற்ற உதவும் எனக் கூறப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237472&reg=3&lang=1

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2237907) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam