பிரதமர் அலுவலகம்
விளையாட்டுகளில் பெண்களை ஊக்குவிக்கும் அஸ்மிதா முன்முயற்சி குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
08 MAR 2026 4:37PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் பெண்களிடையே விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட கேலோ இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியான, வெற்றிகரமான அஸ்மிதா முயற்சியைப் பற்றி அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு அமைச்சகத்தின் செயல்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது எனவும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையில் அஸ்மிதா போட்டிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்தக் கட்டுரையில், நாடு முழுவதும் பெண்களிடையே விளையாட்டை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட கேலோ இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியான, வெற்றிகரமான அஸ்மிதா முயற்சியைப் பற்றி மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே எழுதியுள்ளார்.
பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் விளையாட்டு அமைச்சகத்தின் செயல்பாடுகளை அமைச்சர் எடுத்துரைத்துள்ளார். 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய அஸ்மிதா விளையாட்டுப் போட்டிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்."
***
(Release ID: 2236593)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2236640)
आगंतुक पटल : 101
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam