பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மக்கள் மருந்தக தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் ஏற்படுத்தியுள்ள நல்ல தாக்கங்களைப் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

प्रविष्टि तिथि: 07 MAR 2026 10:15AM by PIB Chennai

பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தின் மூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் மக்கள் மருந்தக தினம் 2026-ஐ முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மக்கள் மருந்தக மையங்கள் மூலம், எண்ணற்ற குடும்பங்கள் மருந்துகளுக்கான செலவுகளை மிச்சப்படுத்தி, சிறந்த சிகிச்சையைப் பெறுகின்றன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தின் மூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் மக்கள் மருந்தக தினம் 2026-ல் எனது நல்வாழ்த்துகள். இந்த முயற்சி நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மக்கள் மருந்தக மையங்கள் மூலம், எண்ணற்ற குடும்பங்கள் மருந்துகளுக்கான செலவுகளைச் சேமித்து முறையான சிகிச்சையைப் பெறுகின்றன."

***

(Release ID: 2236248)

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2236316) आगंतुक पटल : 109
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu