பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேம்படுத்தப்பட்ட இணைப்புகள் மூலம் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான இந்தியா - செஷல்ஸ் கூட்டு தொலைநோக்கு

இடுகை இடப்பட்ட நாள்: 09 FEB 2026 3:28PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், செஷல்ஸ் குடியரசின் அதிபர் டாக்டர். பேட்ரிக் ஹெர்மினி, 2026 பிப்ரவரி 5 முதல் 10 - ம் தேதி வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதிபர் ஹெர்மினியின் பதவியேற்றுக் கொண்டு 100 நாட்களுக்குப் பிறகு அவர் மேற்கொண்டிருக்கும் இந்த பயணம், இரு நாடுகளின் நீண்டகால மற்றும் பன்முகத் தன்மை கொண்ட நட்புறவை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் உதவிடும். அவரது இந்திய பயணத்தின் போது, செஷல்ஸின் 50 - வது சுதந்திர தினம் மற்றும் இவ்விரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 50 - வது ஆண்டு நிறைவைக் குறிப்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

2026 பிப்ரவரி 9 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசிய போது, அந்நாட்டு அதிபர் ஹெர்மினி பரஸ்பரம் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனை நடத்தினார். அக்டோபர் 2025-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக  திரு ஹெர்மினிக்கு பிரதமர் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார். கடல்சார் அண்டை நாடுகளாக திகழும் இந்தியா - செஷல்ஸ் இடையே வலுவான உறவுகள், ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையுடன் கூடிய நீண்டகால நட்பு நாடுகளாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளன என்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். செஷல்ஸ்-இந்தியா உறவுகள் மக்களை மையமாகக் கொண்டவை என்றும், மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை இது வலுப்படுத்துவதாக உள்ளது என்றும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியாவின் 'மகாசாகர்' (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர, முழுமையான முன்னேற்றம்) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இரு நாடுகளின் முக்கிய பங்களிப்பை தலைவர்கள் மீண்டும் உறுதி செய்தனர்.

இந்தியா - செஷல்ஸ் இடையே வளமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் தொடர்புகளை நினைவு கூர்ந்த இரு தலைவர்களும், இரு நாட்டு மக்களின் பாதுகாப்பு, வளம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக தேசிய வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

செஷல்ஸ் மற்றும் கடல்சார் பிராந்தியத்திற்கான நம்பகமான நாடாக உள்ள இந்தியாவின் பங்களிப்பு குறித்து அந்நாட்டு அதிபர் திரு ஹெர்மினி சுட்டிக் காட்டினார். செஷல்ஸ் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இந்தியா அளித்து வரும் நீண்ட கால உதவி மற்றும் ஒத்துழைப்பிற்காக அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225395&reg=3&lang=1

***

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235376) வருகையாளர் எண்ணிக்கை : 45