மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசியாவில் நிலவிவரும் சூழல் குறித்து மறுஆய்வு செய்வதற்காக பிரதமர் தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAR 2026 11:30PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் நிலவிவரும் சூழல் குறித்து மறுஆய்வு செய்வதற்காக பிரதமர் தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக்கூட்டம் இன்று மாலை (மார்ச் 01) நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானில் நடந்த வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து பல்வேறு வளைகுடா நாடுகளில் நடந்த தாக்குதல்கள் உட்பட பல்வேறு தாக்குதல்கள் குறித்து மத்திய அமைச்சரவைக் குழுவுக்கு விரிவாக விளக்கப்பட்டது. இப்பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து தனது கவலையை அமைச்சரவைக்குழு வெளிப்படுத்தியது.

இப்பிராந்தியத்திற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மற்றும் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்கள், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார மற்றும் வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக்குழு விரிவாக ஆய்வு செய்தது.

மேற்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் மத்திய அமைச்சரவைக் குழு அறிவுறுத்தியுள்ளது. நாடுகளுக்கிடையே மோதல் போக்குகளை பேச்சுவார்த்தைகள் மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கை மூலம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியதன் அவசியம் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் குழு எடுத்துரைத்துள்ளது.

***

(Release ID: 2234325)

TV/SV/RK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2235288) வருகையாளர் எண்ணிக்கை : 22