பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இலங்கை அதிபருடன் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 9:49PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் திரு அனுர குமார திசாநாயக்காவை  பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (பிப்ரவரி 20) சந்தித்து பேசினார். கடந்த 2024-ம் ஆண்டு அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட பின் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட நிலையில் இது அவரது இரண்டாவது பயணமாகும்.

2025 ஏப்ரல் மாதம் பிரதமர் இலங்கையில் மேற்கொண்ட அரசு முறைப் பயணம் உட்பட, அண்மையில் நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளை அடுத்து இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்தனர். இயற்பியல், டிஜிட்டல் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நிலைப்பாட்டை இரு தலைவர்களும் உறுதி செய்தனர். வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டுவதில் தொழில்நுட்ப பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்திய அவர்கள், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வது குறித்து பரஸ்பரம் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

தித்வா சூறாவளி பாதிப்பையடுத்து இந்தியா அளித்த விரைவான மற்றும் நிபந்தனையற்ற ஆதரவுக்கு அந்நாட்டு அதிபர் திசாநாயக்க நன்றி தெரிவித்து கொண்டார். இக்கட்டான தருணத்தில் முதல் நாடாக இந்தியா அவசரகால நிவாரணப் பொருட்களை அனுப்பியதுடன், 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தின் கீழ் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கும் இந்தியா உதவியது. 450 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நிதியுதவி தொகுப்பை வழங்கியதன் மூலம மறுகட்டமைப்புக்கான இந்தியாவின் தொடர் ஆதரவில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.

***

(Release ID: 2231009)

TV/SV/RK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2235274) வருகையாளர் எண்ணிக்கை : 36