பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜோர்டான் மன்னருடன் பிரதமர் உரையாடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 MAR 2026 9:45PM by PIB Chennai

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பிரதமர் திரு  நரேந்திர மோடி உரையாடினார்.

அந்த பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். ஜோர்டான் மக்களின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்தத் துயரமான நேரத்தில் ஜோர்டானில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு ஆதரவளிப்பதற்காக மன்னருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்த உரையாடல் பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

"ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் உரையாடினேன். பிராந்தியத்தில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தோம். ஜோர்டான் மக்களின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நலனுக்கு எங்கள் முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் ஜோர்டானில் உள்ள இந்திய மக்களின் பாதுகாப்பிற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்."      

***

(Release ID: 2234783)

TV/BR/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2234790) வருகையாளர் எண்ணிக்கை : 89