பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

மகா ரத்னா பொதுத்துறை நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள்படி மின்தொகுப்புக்கான சமபங்கு முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 24 FEB 2026 3:35PM by PIB Chennai

மகா ரத்னா பொதுத்துறை நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள்படி மின்தொகுப்புக்கான சமபங்கு முதலீட்டை அதிகரிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இதன்படி ஒவ்வொரு துணை நிறுவனத்திற்கும் ரூ.5,000 கோடி என்ற நிதியுதவி ரூ.7,500 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பில் 15 சதவீதம் என்ற உச்சவரம்பு நீடிக்கிறது.

இந்த நிதியுதவியின் மூலம் மின் தொகுப்பு தற்போது மின்சாரம் கொண்டு செல்லும், பிற வலையமைப்புகளுடன் ஒப்பந்தப் புள்ளிகள் கேட்பில் ஈடுபட முடியும். மேலும், இதன் முதலீடு அதிகரிப்பதன் காரணமாக புதைப்படிமம் அல்லாத ஆதார வளங்களிலிருந்து 500 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் இலக்கை அடையவும் முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232104&reg=3&lang=2

 

---

TV/SMB/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2234604) வருகையாளர் எண்ணிக்கை : 33