பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 24 FEB 2026 3:29PM by PIB Chennai

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தை ரூ.1,677 கோடி செலவில் விரிவாக்கம் செய்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது. இது காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பையும் போக்குவரத்தையும் வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாகும். பாதுகாப்புப் படையினருக்கான முகாம் கட்டுதல் உள்ளிட்டவையும் இத்திட்டத்தில் அடங்கும்.

இந்திய விமானப்படையின் பட்காம் விமானப்படை தளத்திற்குள் இந்திய விமான நிலைய ஆணையம் இயக்கிவரும் இந்த விமான நிலையம் 2005-ம் ஆண்டு சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. இது ஸ்ரீநகரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

முக்கிய காலங்களில் 2900 பயணிகளையும் ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் பயணிகளை கையாளும் வகையிலும் 73.18 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

***

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232098&reg=3&lang=2

TV/IR/LDN/KR


(रिलीज़ आईडी: 2234584) आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam