பிரதமர் அலுவலகம்
கேரளம் என்று மாநிலத்தின் பெயரை மாற்றியதற்காக, பிரபல மலையாள இலக்கியவாதிகள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 7:34PM by PIB Chennai
கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றியமைத்ததற்காக, பிரபல மலையாள இலக்கியவாதிகள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புகழ்பெற்ற மலையாள இலக்கியவாதிகளை வரவேற்பதில் தாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களுடனான கலந்துரையாடல் கருத்தாழமிக்கதாக இருந்தது என்று தெரிவித்தார். கேரளம் மற்றும் மலையாளம் மீதான இலக்கியவாதிகளின் தீவிர ஈடுபாட்டுடன் கூடிய அர்ப்பணிப்பை இந்த சந்திப்பு பிரதிபலித்ததாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றியமைத்ததற்காக நன்றி தெரிவிக்க வருகை தந்திருந்த புகழ்பெற்ற மலையாள இலக்கியவாதிகளின் குழுவை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தக் கலந்துரையாடல் கருத்தாழமிக்கதாக அமைந்ததுடன், கேரளம் மற்றும் மலையாளத்தின் மீதான அவர்களது அதீத ஈடுபாட்டுடன் கூடிய அர்ப்பணிப்பை இது பிரதிபலித்தது.”
***
(Release ID: 2233669)
TV/BR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2233733)
வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam