பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

2026-27 பருவத்திற்கு பதப்படுத்தப்படாத சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 24 FEB 2026 3:37PM by PIB Chennai

2026-27 சந்தைப் பருவத்திற்கு பதப்படுத்தப்படாத சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2026-27 சந்தைப் பருவத்திற்கு பதப்படுத்தப்படாத சணலுக்கான (டிடி-3 வகை) குறைந்தபட்ச ஆதரவு விலை குவின்டாலுக்கு ரூ.5,925  என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  உற்பத்திச் செலவைவிட குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டிற்கு இணங்க இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2025-26 சந்தைப் பருவத்தைவிட தற்போது குவின்டாலுக்கு ரூ.275 அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232106&reg=3&lang=1

***

AD/SMB/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2232305) வருகையாளர் எண்ணிக்கை : 11