பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஸ்பெயின் அதிபர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 FEB 2026 1:48PM by PIB Chennai
ஸ்பெயின் அதிபர் திரு. பெட்ரோ சான்செஸ் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இரு தலைவர்களும், குறிப்பாக பாதுகாப்பு, தற்காப்பு, தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில், இந்தியா-ஸ்பெயின் நட்புறவை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர்,
2026-ம் ஆண்டை இரு நாடுகளும் இந்தியா-ஸ்பெயின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆண்டாகக் கொண்டாடுகின்றன.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தனித்தனி இடுகைகளில், திரு மோடி கூறியிருப்பதாவது:
“தில்லியில் அதிபர் பெட்ரோ சான்செஸுடன் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தினேன். குறிப்பாக பாதுகாப்பு, தற்காப்பு, தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில், இந்தியா-ஸ்பெயின் நட்பை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தேன். 2026-ம் ஆண்டை இந்தியா-ஸ்பெயின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் ஏஐ ஆண்டாக நமது நாடுகள் கொண்டாடுகின்றன. இது மக்களிடையேயான தொடர்புகளை ஆழப்படுத்தும். பல்கலைக்கழகங்களின் ஒரு பெரிய குழுவும் இந்தியாவிற்கு வருவதைக் கண்டு மகிழ்ச்சி. இதுவும் நமது மக்களை இணைப்பதில் நீண்ட தூரம் செல்லும்.
ஐரோப்பிய யூனியனுடனான வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஸ்பெயினுடனான பொருளாதார கூட்டாண்மையில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் நமது நாடுகளின் மக்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்.”
***
(Release ID: 2229523)
AD/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2229814)
வருகையாளர் எண்ணிக்கை : 7