பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாசறை திரும்புதல் 2026 நிகழ்ச்சிகளில் இருந்து சில காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 29 JAN 2026 10:15PM by PIB Chennai

பாசறை திரும்புதல் 2026 நிகழ்ச்சிகளில் இருந்து சில காட்சிகளை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பல்வேறு இசைக் குழுக்களின் நிகழ்வுகள் பசுமையாக நினைவில் நிற்பவை என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகளில் திரு மோடி கூறியிருப்பதாவது;

“பாசறை திரும்புதல் 2026 நிகழ்வின் சில காட்சிகள் இங்கே. பல்வேறு இசைக் குழுக்களின் நிகழ்வுகள் பசுமையாக நினைவில் நிற்பவை.

விமானப்படை, கப்பற்படை, மத்திய ஆயுத காவல்படைகள் ஆகியவற்றின் பேண்ட் இசைக்குழுக்களின் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இருந்தன.

ஆபரேஷன் சிந்தூர், வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றி, ஆஷ்னி ட்ரோன், பைரவ் படைப்பிரிவு, தொன்மையான கருட வியூகம் ஆகியவற்றுக்கு ராணுவ இசைக் குழு அமைத்த இசை மிகச் சிறப்பாக இருந்தது.”

***

(Release ID: 2220592)

AD/SMB/LDN/KR


(रिलीज़ आईडी: 2229592) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam